குட்கா விற்ற வழக்கில் பாமக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

0 405
Stalin trichy visit

திருவெறும்பூரில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா விற்கப்பட்டு வருவதாக திருவெறும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் இதன் அடிப்படையில் நாகராஜ் தலைமையிலான போலீசார் அந்த கடையை சோதனையிட்டபோது கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 5 குட்கா பண்டல்கள் கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக திருவெறும்பூர் சுருளி கோவில் தெருவை சேர்ந்த பாமக கட்சியின் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ள ரவிக்குமார்(42) என்பவரை கைது செய்தனர்.

அதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பெட்டிக்கடை குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பெட்டி கடையை சோதனையிட்ட போது 42 குட்கா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக வடக்கு காட்டூர் பாரதிதாசன் 10வது தெருவை சேர்ந்த காளியம்மாள்(60) என்பவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவெறும்பூர் போலீசார் ரவிக்குமாரையும், காளியம்மாளையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நிபந்தனை ஜாமீன் நீதிபதி விடுதலை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.