ஒன்றிய அரசைக் கண்டித்து சி.பி.எம் கட்சியினர் சாலை மறியல்

0 493
Stalin trichy visit

நம்பர்1டோல்கேட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு,

வேலையின்றி வீதியில் திரியும் இளைஞர்கள் பட்டாளம்,

அதானியின ஒரு நாள் வருமானம் 1002 கோடி, ஏழை மக்களின் ஒரு நாள் கூலி 200, அதையும் பிடுங்கி அதானிக்கு தாரை வார்ப்பது வளர்ச்சியா,

400 ரூபாய்க்குவிற்ற எரிவாயு சிலிண்டர் ரூ.1200, ரூ.60 க்கு விற்ற பெட்ரோல் ரூ. 103,

பொதுத்துறை நிறுவனங்களை விற்க்காதே,

100 நாள் வேலைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கு

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினரர்.
புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். இந்த ஆர்பபாட்டத்தில் லால்குடி ஒன்றிய செயலாளர் பாலு, மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றி செயலாளர் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மூத்த தோழர் கே வி எஸ் இந்துராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பூமாலை, நாகராஜ், கோமதி மற்றும் லால்குடி, புள்ளம்பாடி மண்ணச்சநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 30 பெண்கள் உள்ளிட்ட 117 பேரை கொள்ளிடம் போலீசார் கைது செய்து உத்தமர் கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.