வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை.
மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் தனியார் பத்திரிக்கை நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று பவுன் நகை, ரூ. 55 ஆயிரம் பணம் கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீலைவீச்சு.
சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள முத்து நகரை சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார் இவர் திருச்சி தினமலர் பத்திரிக்கை அலுவலகத்தில் டிசைனராக பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவி கடந்த 4 ம் தேதி மாலை வாளாடியில் உள்ள அவரது தாயின் வீட்டிற்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து சிவகுமாரும் அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்காக அலுவலகம் சென்று விட்டார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு இன்று காலை 7 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் பின்பக்கம் உள்ள இரும்பு கேட் திறக்கப்பட்டு பின்பக்க கதவின் உடைக்கப்பட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் கைச்செயின், கழுத்து செயின் ஒரு பவுன், ஒரு பவுன் தோடுகள் என் 3 பவுன் நகைகளும் மற்றும் ரூ. 55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை தம் நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து சிவகுமார் கொள்ளிடம்ம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.