மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மணப்பாறை அருகே அரசு பள்ளியில் கழிவறை கட்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பேச்சங்கம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி ( வயது 40). இவர் குரும்பபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து எலக்ட்ரிக் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு தண்ணீர் விடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துரைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார் துரைச்சாமியின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.