அரசு பேருந்தில் படிக்கட்டில் பயணம்: மாணவரின் கால்விரல்கள் துண்டானது

0 245
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற தனியார் பள்ளியின் 10 ம் வகுப்பு மாணவன் அரசுப் பேருந்திலிருந்து தவறி் விழுந்த்தில் மாணவனின் கால் விரல்கள் துண்டானது.

மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இவரது மகன் 15 வயதான நிசாந்த்.இவர் அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மண்ணச்சநல்லூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த  பெரியசாமி (50) ஓட்டுனராகவும் சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த  கமல்(42) நடத்துனராகவும் பணியில் இருந்துள்ளனர். பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்வதற்க்காக அத்தாணியிலிருந்து நிஷாந்த் அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார்.பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மாணவர் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.
மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியுள்ளது.
அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவர் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.