கழிவறையை திறக்க கோரி போராட்டம் அறிவிப்பு
திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடி 15 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பல மாதமாக பூட்டியே கிடக்கும் கக்கூஸை உடனடியாக திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ச.கண்ணனூர் பேரூராட்சியை கண்டித்து வருகின்ற 9 ந்தேதி சீனிவாசன் தலைமையில் கக்கூஸ் முன்பு கக்கூஸ் போகும் போராட்டம் நடைபெற உள்ளது.
ச.கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட மாகாளிக்குடி 15 வது வார்டு அக்கரஹாரம் பகுதியில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது.இந்த சமுதாய கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் பல மாதமாக பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் மாகாளிக்குடி 15 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு பல மாதமாக பூட்டி கிடக்கும் கக்கூஸ், மக்கள் வரிப்பணத்தை நாசமாக்காதே,
கக்கூசை உடனடியாக திறக்க கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வருகின்ற 9 ம் தேதி ச. கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சியை கண்டித்து மாகாளிக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கக்கூஸ் முன்பு கக்கூஸ் போகும் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு சந்திரன், விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன்,விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சக்தி விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் நாயகம் காமராஜ் துணை செயலாளர் தனம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.