மூதாட்டியிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்

0 250
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் 68 வயதான தனலட்சுமி. இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.