தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

0 402
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). போர்வெல் லாரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் துவரங்குறிச்சி செல்ல பேருந்திற்காக வையம்பட்டி கார் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது குடிபோதையில் அங்கு வந்த சடையம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (வயது 34) என்பவர் விஜயகுமாரிடம் மது வாங்கித்தறுமாறு கூறி தகாத வார்த்தையால் பேசி தகறாறு செய்துள்ளார். நீ யார் என்றே எனக்கு தெரியாது சென்றுவிடு என்று கூறியதால் சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை குத்தியுள்ளார். காயமடைந்த விஜயகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வையம்பட்டி போலீசார் சரவணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.