பென்காக் சிலாட் போட்டி : திருச்சி மாவட்டம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது
திருச்சி மாவட்டம், கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 5 வது மாநில பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், தூத்துக்குடி உட்பட 19 மாவட்டத்தில் இருந்து 500 மேற்பட்ட வீரர்கள் பங்குகொண்டார்கள்..
இதில் திருச்சி மாவட்டம் சார்பில் 75 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதில் 13 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம் மற்றும் 19 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 42 பதக்கங்கள் வென்று. 2 வது ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை திருச்சி மாவட்டம் வென்றது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் பென்காக் சிலாட் செயலாளர் த. கமலேஷ் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இதில் தங்க பதக்கம் வென்ற வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்