திருச்சி இ-சேவை மையத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் – ஆட்சியர்
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளது அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது மேலும் இந்த வாய்ப்பினை தேவைப்படும் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்