டெல்லியில் பெண் காவலர் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

0 426
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெம்பர் 1 டோல்கேட்டில் திருச்சி வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். தலைநகர் டெல்லியில் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றிய 21 வயது இளம் காவல் அதிகாரி கடந்த 27ந் தேதி இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற போது சமூக விரோதிகள் சிலரால் கூட்டு பாலியியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர கொலைக்கு நீதி வேண்டியும், அதற்கு காரணமாணவர்களை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிக்க வேண்டும். இது போன்ற கொடூர சம்பவங்கள் இனி எங்கும் நடக்கக்கூடாது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் கூறியிருக்கிறார்கள். நாங்களும் அதை வலியுறுத்துகிறோம். வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்ளுக்கான பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


இந்த வழக்கை தாமாக முன் வந்து உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் எடுத்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். தலைநகர் டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. டெல்லியின் மாகானத்திற்கு அந்த காவல்துறையின் அந்தஸ்தையும், மாநில உரிமையையும், சட்டம் ஒழுங்கையும் அந்த மாநிலமே ஏற்று நடத்தக்கூடிய வகையில் இருக்குமானால் அந்த மாநிலத்தை ஆளுகின்றவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது போனற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.