பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி…
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் நேற்று இரவு மறும நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு சென்றுள்ளனர். இரவு ஒரு மணி அளவில் கடைக்கு வந்த மர்ம ஆசாமி மின்விளக்கு எரிவதைக் கண்டு அதனை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மின்விளக்கு அணையாத காரணத்தினால் அதன் மீது கருப்பு நிற பெயிண்டை தெளித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கடையின் இரும்பு கதவை வெல்டிங்கால் துளையிட்டு உள்ளே செல்ல முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாதியிலேயே மர்ம சாமி அங்கிருந்து சென்று விட்டார். காலையில் கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடை முன் கதவு துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடை உரிமையாளர் கார்த்திக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள உரிமையாளர் கார்த்தி உப்பிலியபுரம் காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் இப்பகுதியில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மூதாட்டியிடம் 8 சவரன் நகையை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது