சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 83.90 லட்சம் பணம், 3.456 கிலோ தங்கம் காணிக்கை

0 328
Stalin trichy visit

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி இம்மாதம் இரண்டாவது முறையாக கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி இணை ஆணையர் சுதர்சன், திருச்சி உதவி ஆணையர் மோகனசுந்தரம், புதுக்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ், கோவில்மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

இதில் காணிக்கையாக 83 லட்சத்து 90 ஆயிரத்து 389 ரூபாய் ரொக்கமும், 3 கிலோ 456 கிராம் தங்கமும், 4 கிலோ 140 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 59ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.