கர்ப்பிணியை வீட்டை விட்டு விரட்டிய மாமனார்-மாமியார்

0 559
Stalin trichy visit

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30), இவர் திருச்சியில் தரை கடை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி(22). இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். ஆனந்தியும்-ராஜேசும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதல் திருமணத்தால் ராஜேசின் பொற்றோருக்கு விருப்பம் இல்லை. இருந்த போதிலும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராஜேஷ்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜேஷ்குமார் இறக்கும்போது ஆனந்தி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து ஆனந்தியின் மாமனார் மற்றும் மாமியார் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர். இதனால் கண்ணீருடன் வெளியே வந்த ஆனந்தி எங்கு செல்வதென்று தெரியாமல் நின்றார். பின்னர் ஆனந்தி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தார். கடந்த 2 மாதம் அங்கேயே தங்கி இருந்து கோவிலில் கிடைத்த அன்னதானத்தை சப்பிட்டும் அங்கு வந்தவர்களிடம் பிச்சை எடுத்தும் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை பார்த்த சிலர் ஆனந்தியை திருச்சி அருங்கொடை இல்லத்தில் சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் ஆனந்தியை கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் 8 மாத கர்ப்பிணியான ஆனந்தியை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.