சவ ஊர்வலத்தில் திடீர் மோதல்
திருச்சி பாலக்கரை காஜாப்பேடை மெயின்ரோட்டில் சவஊர்வலம் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அப்போது ஊர்வலத்தில் சென்ற ஒரு சில வாலிபர்கள் மதுபோதையில் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டனர். இதை கண்டு அங்கு பணியில் இருந்த பாலக்கரை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றார்.
அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கையில் வைத்து இருந்த லத்தியை அந்த வாலிபர்கள் பிடித்து இழுத்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 4 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.