சாலையில் விழுந்த பழமையான புளியமரம்-போக்குவரத்து பாதிப்பு.

0 273
Stalin trichy visit

லால்குடி அன்பில் சாலையில் இருபுறமும் பழமையான மரங்கள் அமைந்துள்ளது.இந்நிலையில் காற்று மழையினால் கீழமணக்கால் பகுதியிலிருந்த பழமையான புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.

இச்சம்பம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் ராஜா, சாகுல் ஹமீது, மனோஜ் குமார்,சசிக்குமார் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் மரம் அறுக்கும் எந்திரம் மூலம சாலையில் விழுந்த புளிய மரத்தை அகற்றினார். மேலும் மின் வயரில் மரம் விழுந்ததால் இந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இதனைடுத்து மின்வாரிய அதிகாரிகள் மின் வயரை சரி செய்து மின் இணைப்பு வழங்கினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.