வேன் மோதி 4 வயது குழந்தை பலி

0 344
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள நல்லபொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் தங்கவேல் பாண்டி(4). முள்ளிப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற அழகம்மாள் மகன் தங்கவேல் பாண்டியுடன் முள்ளிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை திண்டுக்கல்– திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று விடவே சோழவந்தானில் இருந்து வேலூர் நோக்கி சென்ற பயணிகள் வேன் சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே தங்கவேல் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.