வாலிபருக்கு கத்திக்குத்து குடல் வெளியே வந்த நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
துறையூரை அடுத்த உள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(23). கூலி தொழிலாளி. இவர் கடந்த 7.9.2021ம் தேதி இரவு 1 மணிக்கு அதே ஊரில் வசித்து வரும் சித்தப்பா உறவு முறை உள்ள தனது உறவினர் சந்திரசேகர்(37) என்பவருடன் மது போதையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று தனது நண்பர் ஒருவர் சிறையில் இருப்பதாகவும், அவரை வெளியில் கொண்டுவர தனக்கு பணம் தேவைப்படுகிறது என்று தனது சித்தப்பா சந்திரசேகரனிடம் கேட்டுள்ளார்.
அப்போது இது சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாய்த்தகராறு முற்றி சந்திரசேகரன் வீட்டிலிருந்த கத்தியால் சிலம்பரசனை வயிற்றிலும், நெஞ்சுப் பகுதியிலும் குத்தியுள்ளார். இதில் வயிற்றில் குத்தியதில் குடல் பிதுங்கி வெளியே வந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சிலம்பரசனை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். அங்கிருந்து கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி சந்திரசேகர் தலைமறைவானார். இதையடுத்து சந்திரசேகர் துறையூரில் இருந்து வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பொழுது துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி ஏற்கனவே அடிக்கடி பிரச்சனையில் சந்திரசேகரன் கைதாகி இருந்ததால் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டு இருந்ததாலும் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை செய்து உள்ளார்.
அப்பொழுது முன்னுக்கு முரணான பதிலை கூறியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது தனது அண்ணன் மகனை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிலம்பரசனின் அண்ணன் தினேஷ்(25) அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து சிறையில் அடைத்தார்கள். சிலம்பரசன் துறையூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.