அங்கன்வாடி மையத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என வெளியான வாட்ஸ் ஆப் ஆடியோவால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. அந்த அலுவலகத்தின் கீழ் வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 102 அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இதை 3 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சில வாட்ஸ் ஆப் குரூப்புகளும் வைத்து அதன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி சமீபத்தில் வாட்ஸ் அப் குழுவில் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் ஒரு வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி இருந்தார். அதில் பேசியிருப்பதாவது, அம்மா எல்லோருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு. ஒரு நோட்டுக்கு 200 ரூபாயாம், 4 நோட்டுக்கு 700 ரூபாயாம் ஆடிட் காசு. முட்டை எடுக்க வர்றப்ப எல்லாரும் கொண்டு வரனும், அவங்க எல்லாம் சரி பண்ணிக்கிறாங்களாம், சொல்லச்சொன்னாங்க சொல்லியாச்சு, காசு இல்லன்லாம் சொல்லதிங்க.102 சென்டருக்கும் ஒரே நாள்ள முடிச்சர்றாங்களாம் பாத்துங்கோங்க, அவ்வளவு தான் நான் சொல்வேன் என்று அந்த ஆடியோவில் இருந்தது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கன்வாடி மையங்களில் இதுபோன்று தணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகின்றது. அதன்படி தற்போது தணிக்கை நடைபெற்று வருகின்றது. இதனால் தணிக்கைக்கு வருபவர்களும் பணம் வழங்கிட வேண்டும் என்று கூறி வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகின்றது.
ஆனால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மை நிலையை கண்டறித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது. தணிக்கை அதிகாரிகளுக்கு 700 ரூபாய் வழங்கிட வேண்டும் என்று ஒரு வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. அதில் ஒரு நோட்டுக்கு 200 வீதம் 4 நோட்டுக்கு 800 ரூபாய் வழங்கிட வேண்டும். ஆனால் 100 ரூபாய் குறைத்து 700 ரூபாய் ஆடிட்கா முட்டை எடுக்க வரும் போது அவசியம் எல்லோரும் கொண்டு வரனும். ஒரே நாள்ள முடிச்சுருவாங்கலாம்.
அவங்க எல்லாம் சரிபண்ணிக்கிராங்களாம் என்று அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பேசியதும் ஓர் அங்கன்வாடி பணியாளர்கள் தான் என்றும் தெரிகிறது. வையம்பட்டி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் இதுபோன்று அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாகவும் தொடர்ந்து வாட்ஸ் அப்பிலேயே தங்களுக்கு சாதகமாக சிலரை வைத்து வாய்ஸ் மெசேஜ் பதிவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.