வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்து
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தாரானூர் கிராமத்தில் வைக்கோல் போரில் அணையாத புகைப்பொருள் பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
தாரானூர் கிராமத்தைச் அங்குசாமி மகன் ராஜேஷ். இவரது வீட்டின் பின்புறம் சுமார் 120 கட்டுகள் கொண்ட வைக்கோல் போர் அமைத்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் ஏதோ ஒரு அணையாத தீப்பொருள் பட்டு வைக்கோல் போர் திடீரென தீ
விபத்துக்குள்ளானது. இது குறித்து ராஜேஷ் புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலையஅலுவலர் பாரதி மற்றும் வீரர்கள் அமுதகுமார், ரமேஷ், முகமது சமீர், தரணிதரன், அருண்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர்கள் விரைந்து சென்று தீயினை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.