ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனை தொடர்ந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்தார்.அங்கு சமயபுரம் கோவிலில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஆளுநருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்ற ஆளுநர் முதலில் கொடி மரத்தை தரிசனம் செய்தார். பின்னர் மூலஸ்தானத்திற்கு சென்று சமயபுரம் மாரியம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் உள் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தார். சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்த ஜார்கண்ட் மாநில ஆளுநருக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் தரிசனத்தை முடித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.