வட மாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். புதூரில் வட மாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர்ராவ் மகன் ராஜாராவ் (65). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக குடும்பத்தினரிடம் தகராறு செய்துவிட்டு தனியாக பிரிந்து வந்துள்ளார். மேலும் தீபாவளி சமயத்தில் போனஸ் வாங்கிக்கொண்டு வந்தவர் பின்னர் கம்பெனிக்கும் செல்லவில்லை. இந்நிலையில் சமயபுரம் எஸ்.புதூர் பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். சடலத்திற்கு அருகில் விஷப் பாட்டில்கள் கிடந்துள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ஏன் வந்தார், யாரை பார்ப்பதற்காக வந்தார். வந்த இடத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.