பேருந்தில் பெண்ணிடம் 11 ½ பவுன் தங்க நகை திருட்டு
நம்பர்1டோல்கேட்டில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம்11 ½ பவுன் நகை திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
திருச்சி, நவ. 25 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் பேருந்தில் பயணம் செய்து வந்த பெண்ணிடம் கைப்பையில் இருந்த 11 ½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். காவல் நிலையத்தில் புகார். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டூர் நடுத்தரவை சேர்ந்தவர் அழகிரி இவரது மனைவி வனிதா (27). இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடிமேட்டூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி லால்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளார். பின்னர் லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மகளிர் பேருந்தில் ஏறி நம்பர் 1 டோல்கேட் ரவுண்டாவில் இறங்கியுள்ளார். பின்னர் சேலம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது தனது ஹேண்ட் பேக்கை பார்த்துள்ளார். அப்போது ஹேண்ட் பேக் திறந்து இருந்துள்ளது. அதில் வைத்திருந்த 7 ½ பவுன் ஆரம்,4 பவுன் நெக்லஸ் என11 ½ பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.