மின்னல் தாக்கியதில் மாடுகள் பலி

0 737
Stalin trichy visit

திருச்சி, நவ. 25 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மருவத்தூர் பகுதியில் வசிப்பவர். விவசாயி கணபதி இவர் விவசாய தொழில் செய்து வருவதோடு தனது வயலில் கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார். வழக்கம் போல் இன்றும் மதியம் தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார் அப்பொழுது கருமேகங்கள் சூழ்ந்து திடீரென இடியுடன் கூடிய மின்னல் மின்ன தொடங்கியது சற்று நேரத்தில் திடீரென மின்னல் மாடுகள் மீது பாய்ந்தது. மின்னல் தாக்கியதில் இரண்டு பசுமாடு உள்பட ஒரு கன்று குட்டி உயிரிழந்தது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்து ஜெசிபி இயந்திரம் மூலம் மண்ணில் புதைத்தனர் பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.