ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் குளிக்கும் சிறுவர்கள்
ஆபத்தை உணராத சிறுவர்கள் வெள்ள நீரை கடந்து செல்லும் காட்சி !!
திருச்சி மாவட்டம் துறையூரில் பகுதியில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் இங்கு உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன பொதுப்பணித்துறையினருக்கு கட்டுப்பாட்டில் உள்ள துறையூர்பெரிய ஏரியானது சுமார் 436 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது
தற்போதுஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான பச்சமலை கானப்பாடி ஆகிய இடங்களில் தொடர் கன மழை பெய்து வரும் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து ஏறியானது முழு கொள்ளளவை எட்டியது தற்போது உபரி நீர் நிரம்பி வழி வழிந்தோடி இங்குள்ள சின்ன ஏரிக்கு செல்கிறது வருகிறது இதில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஏரி வழிந்து ஓடும் வெள்ள நீரை கடந்து செல்வதும் ஏரி நீரில் குளித்து விளையாடி
வருகின்றனர் காற்றாற்று வெள்ளம் திடீரென எப்போது அதிகரிக்கும் என்று ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பாதுகாப்பின்றி ஏரியில் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்