விநாயகர் சதுர்த்தி அன்று கூட உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதி

0 630
Stalin trichy visit

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர், அக்டோரில் கொரோனா 3ம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும், தொற்று தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்வாதாரத்திற்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகள், சமூகம், மதக் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரசித்திப்பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி ஆலயத்தின் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்த மலை வாசலில் நினறபடி விநாயகரை வணங்கி செல்கின்றனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதல் உச்சிப்பிள்ளையார் கோவிலில் விழாக்கோலம்போல் காட்சி அளிக்கும் ஆனால் கொரோனா தொற்றும் காரணமாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.