தேசிய கூடோ கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 367
Stalin trichy visit

தேசிய கூடோ கராத்தே போட்டி இமாச்சலபிரதேசத்தில் நடந்தது. இதில் திருச்சி, சேலம் சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இருந்து 41 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் தமிழக அணி 10 தங்கம், 8 வெள்ளி மற்றும் 19 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 37 பதக்கங்களை பெற்றது. திருச்சியை சேர்ந்த சாய், ஸ்ரீவித்யா மற்றும் பிரியங்கா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

இந்நிலையில் பதக்கம் பெற்று ரெயில் மூலம் திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களை வழிநடத்தி சென்ற மாஸ்டர் கந்தமூர்த்திக்கு போட்டியின்போது 5-ம் நிலை கருப்பு பட்டை மற்றும் ரென்சிபட்டம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.