பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணி : மேயர் ஆய்வு

0 447
Stalin trichy visit

திருச்சி, டிச. 4  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் , பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ .243.78 கோடியிலும் , கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலை கள் , மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணி ரூ .106.20 கோடியிலும் என மொத்தம் ரூ .349.98 கோடி செலவில் பஞ்சப்பூர் பெருந்திட்டப் பணிகளுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது . ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் , பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிகளை , மேயர் அன்பழகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்
‌அப்போது கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மேயர், அதுகுறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார் . மேலும் , பணிகளை தரமாகவும் , விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார் .

இந்த ஆய்வின் போது . நகரப்பொறியாளர் சிவபாதம் , செயற்பொறியாளர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன் , மண்டலத் தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் சுபா,உதவி பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.