மணப்பாறை பாஜகவினர் கொண்டாட்டம்
திருச்சி, டிச. 4 திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்ததை பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து மணப்பாறையில் பாஜக நகரத்தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில், பாஜகவினர் பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிகழ்வில், சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சி.ராஜேந்திரன், நகர பொதுச் செயலாளர்கள் கார்த்தி, கண்ணன், சுரேஷ், ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, மாநில மகளிர் அணி தனலட்சுமி, மாவட்ட துணை தலைவர் லலிதா அழகப்பன், சுந்தர் பாண்டியன் பாலகுரு பாபு பாண்டியன் ராமசாமி லெட்சுமணன் சின்னசாமி மணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், மணப்பாறை வடக்கு மண்டல தலைவர் பி.சதீஷ்குமார் தலைமையிலான பாஜகவினர், பொத்தமேட்டுப்பட்டி நேரு சிலை அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், விவசாயி மாநில செயற்குழு உறுப்பினர் சித்தாநத்தம் சுப்ரமணி, பொதுச்செயலாளர்கள் பாலசுப்பிரமணி, செயலாளர் சி.கே.மணிகண்டன், துணைத்தலைவர்கள் தொப்பம்பட்டி பழனிச்சாமி, நல்லுசாமி, ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வையம்பட்டியில் வடக்கு மண்டல தலைவர் குமரேசன், தெற்கு மண்டல தலைவர் கோபிநாத ஆகியோர் தலைமையில் வையம்பட்டி பகுதிகளிலு, மருங்காபுரி மண்டல் பகுதிகளிலும் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.