மெழுகுவர்த்தி ஏந்தி அகதிகள் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, சூடான் உள்பட பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி கடந்த 11-ந் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
31-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது. அப்போது இரவில் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி அமர்ந்து இருள் சூழ்ந்த தங்கள் வாழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் முகாமில் இருந்து விடுதலை செய்ய வலியுறுத்தினார்கள். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தையும் கையில் வைத்து இருந்தனர்.