விநாயகர் சதுர்த்தி அன்று கட்டுப்பாடுகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுத்திடும் வகையில், விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்ககூடாது என்று வலியுறுத்தியதோடுகண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்டத்தில் தனியார் இடங்களில் வைக்கப்பட்ட 147 சிலைகள் போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறியதாக நேற்று திருச்சி மாநகரில் அரியமங்கலம், காந்திமார்க்கெட், கோட்டை ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.