ரெயில் மோதி மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரெத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள்(71). இவர் நேற்று திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலத்திற்கும்– ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில்வே தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.