மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

0 397
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம்(35). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் திருச்சி பாலக்கரை காஜா பெட்டை பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்வெர்ட்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.