ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தனலட்சுமிக்கு ஸ்ரீ எஸ்கே ஹோண்டா நிறுவனம் சார்பில் ஸ்கூட்டி வழங்கப்பட்டது

0 615
Stalin trichy visit

அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக தடகளப் போட்டியில் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் கலந்து கொண்டார். அவரை பாராட்டும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் திருவெறும்பூரில் உள்ள ஸ்ரீஎஸ்கே கொண்ட நிறுவனம் அவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஆக்டிவா ஸ்கூட்டர் பரிசாக வழங்கியது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீஎஸ்கே கோண்டா நிர்வாக இயக்குநர் கிஷோர் கூறுகையில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஒவ்வொருவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து பதக்கம் பெற வேண்டும் என்பது அவர்களின் உயர்ந்தபட்ச ஆசையாக இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறவில்லை என்றாலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தனலெட்மியை வாழ்த்துவதோடு மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீசிஎஸ்கே ஹோண்டாய் சார்பில் ஆக்டிவா பைக் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார்.


பின்னர் இதுகுறித்து தனலட்சுமி கூறுகையில், தனக்கு இது போன்று ஒரு பரிசு கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், நான் தடக்கள பயிற்சிக்காக விளையாட்டு மைதானத்திற்கு செல்வதற்கு வாகனம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் இது பெரும் உதவியாக இருக்கும் வருங்காலத்தில் நம் நாட்டிற்காக பல்வேறு பதக்கங்களை பெற்று பெருமை சேர்ப்பேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.