பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தந்தை பலி : மகன் காயம்

0 284
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மதுரை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி மேம்பாலத்தில் மேடுகாட்டுபட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி (30) என்பவர் தனது இரண்டு வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் புண்ணியமூர்த்தி பலத்த காயத்துடனும்,மகன் லேசான காயங்களுடனும் உயிர் தப்பினர்.இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி புண்ணியமூர்த்தி உயிரிழந்தார்.இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.