மதவெறுப்பு பேச்சை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜன.19 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதவெறுப்பை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை கெடுத்து மத வெறுப்பை திணிக்கும் வகையில் புத்தாநத்தம் பகுதியில் பேசிய ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, தமிழ்மாநில பேச்சாளர் முபாரக் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.