நடந்து சென்றவர் மீது பைக் மோதியதில் 2 பேர் காயம்
திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் தவிட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). இவர் கண்ணனூர் பகலவாடி கிராம சாலையில் முருகன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர் வட்டம் கீரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி மற்றும் சிவக்குமார் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். காயமடைந்த சுப்பிரமணி திருச்சி தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகவும், சிவக்குமார் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.