மர்மமான முறையில் இறந்த கூலி தொழிலாளி

0 574
Stalin trichy visit

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெல்த் பிலோர்ப்பின் (45). கூலி தொழிலாளி இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் திருச்சி புதூர் ஈ.வி.ஆர் ரோட்டில் ஒரு டீக்கடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுபற்றி தகவல் கிடைத்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.