மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

0 577
Stalin trichy visit

திருச்சி துவரங்குறிச்சி அருகே உள்ள கல்லுப்பட்டியில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிவகங்கை மாவட்டம், வலசைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(46), திருமலைக்குடியை சேர்ந்த வெள்ளையன்(27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளையன் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.