அதிமுக ஒன்றிணைய வேண்டி வழிவிடு முருகன் கோவில் சிறப்பு வழிபாடு
திருச்சி, பிப். 5 எடப்பாடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் – அதிமுக ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் அதிமுக நிர்வாகி திருச்சி வழிவிடு வேல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருச்சி ஒத்தக்கடை பகுதியை சார்ந்தவர் ஒத்தக்கடை செந்தில் இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி ஆவார் இவர் தற்பொழுது சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்
இந்நிலையில் இவர் இன்று திருச்சி வழிவிடு வேல்முருகன் கோவிலில் எடப்பாடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியையும் அதிமுக பெற வேண்டும் என வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: அதிமுக என்பது ஒரு குடும்பம் குடும்பத்தில் 5 பெரும் ஒரே மாதிரி இருப்பதில்லை எனவே அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் எடப்பாடி-க்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என தெரிவித்தார்