அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 33-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது

0 429
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 116 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகள் முடிவடைந்தாலும் சொந்த நாட்டுக்கு அனுப்பும்வரை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் முகாமில் உள்ள 30-க்கும்மேற்பட்டோர் தங்களை முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 11-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 33-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்து வருகிறது.

அப்போது குடும்பத்தை பிரிந்து சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை கையில் வைத்து கொண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.