விபத்தில் காயம் அடைந்த கொத்தனார் சாவு

0 397
Stalin trichy visit

சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிக்சன் சாலமன்(57). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரெட்டிமாங்குடியிலிருந்து தச்சங்குறிச்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ரெட்டிமாங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன்(58) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜேந்திரன் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நிக்சன் சாலமன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.