மாவட்ட அளவிலான சிலம்பம் – டேக்வாண்டோ போட்டிகள்
திருச்சி, பிப்.26 திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாஸ் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகடாமி மற்றும் மாஸ் தேக்வாண்டோ கிளப் சார்பில் திருச்சி ஆதவத்தூர் செயின்ட் ஜோனோபார்க் இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான 2 நாள் சிலம்பம் மற்றும் இன்டர் கிளப் தேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்கு சர்வதேச பயிற்சியாளரும், முதன்மை தொழில்நுட்ப இயக்குனரும், 6ம் நிலை கருப்பு பட்டை கிரான் மாஸ்டர் கணேசன் தலைமை தாங்கினார்.
அகில இந்திய நடுவர் மற்றும் பயிற்சியாளருமான நாலாம் நிலை கருப்பு பட்டை சிலம்பம் மாஸ்டர் மேத்யூ செயின்ட் ஜோனோபார்க் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் நாகவேணி சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து 30 கிளப்புகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
8, 14, 17, ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. சிலம்பம் போட்டியில் 300 மாணவ மாணவிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்றனர். இதேபோல் தேக்வாண்டோ போட்டியில் 400- இருக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பிரிவுகள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியின் முடிவில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச தடகள வீரர் டாக்டர் நல்லுசாமி அண்ணாவி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். மேலும் கிளம்ப கிளப் மூலம் பங்கேற்ற குழுவினருக்கு மெடல் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.