திருவெறும்பூர் பகுதியில் 3 வீடுகளில் திருட்டு; பொதுமக்கள் அச்சம்

0 482
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்லையன். இவர் ஓய்வு பெற்ற பெண் ஊழியர் ஆவார். இவர் கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சரவணன் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒருபவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு புடவை மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டிவி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு வீடான செல்லையன் வீட்டின் அருகே உள்ள ஓய்வுபெற்ற பெல் ஊழியர் வரதாச்சாரியும் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலையில் விளக்கு எரிவதை கண்ட பக்கத்து வீட்டு சரவணன் அங்கு சென்ற பார்த்தபோது, அங்கு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே கொள்ளை அடித்து கொண்டிருந்தனர். இதையடுத்து சரவணன் கூச்சலிடவே அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து சரவணன் வரதாச்சாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வரதாச்சாரி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு பீரோ உடைக்கப்பட்டு சாமி அறையும் உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 30 பவுன் நகை 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக செல்லையன் சரவணன் வரதாச்சாரி ஆகிய 3 பேரும் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் சிலர் குடியிருக்கும் வீட்டை நோட்டம் விடுவது தெருக்களில் சென்று வருவதுமான வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கோமராவின் காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.