காந்தி மார்க்கெட் பகுதியில் துரை வைகோ தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப். 3 திருச்சி வெங்காயம் மண்டி, காந்தி மார்க்கெட் பகுதிகளில் திருச்சி நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர, பகுதிகளில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமையில், மார்க்கெட் பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு முன்னிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ திருச்சி காந்தி மார்க்கெட், வெங்காய மண்டி பகுதிகளில் பொதுமக்களிடமும், வியாபார பெருமக்களிடமும் நடந்து சென்று, தீப்பெட்டி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார்.
பகுதி கழகச் செயலாளர்கள் டி. பி. எஸ். எஸ். ராஜ் முகம்மது, மாவட்ட கழக நிர்வாகி ராஜேஸ்வரன், வட்ட கழக செயலாளர் சுருளிராஜன், செந்தில்குமார், சிலம்பரசன், பாண்டியன், மனோகரன், சுப்பிரமணியன், வேலுமணி, சாதிக், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.