திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட டி.எஸ்.பி. கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சல நகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி, ஸ்டேட்வங்கி காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜீவ்காந்திநகர், கிருஷ்ணாபுரம், கங்கை நகர், ஹெல்த் காலனி மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை 18-ந்தேதி மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருவெறும்பூர், மலைக்கோவில், பிரகாஷ்நகர், வேங்கூர், பாலாஜிநகர்ஒரு பகுதி, கூத்தைப்பார்,கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழ மாதேவி, சோழமாநகர்,புதுத் தெரு, நவல்பட்டு, பர்மா காலனி, நேருநகர்,அண்ணா நகர், போலீஸ் காலனி, பூலாங்குடி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்.ஐ.இ.டி. குண்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல் திருச்சி துணை மின்நிலையத்தில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட திருச்சி மத்திய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, கலெக்டர் அலுவலக சாலை, குமுளித்தோப்பு, ராஜா காலனி, கல்லாங்காடு, குமரன்நகர், கனரா பேங்க் காலனி, சீனிவாச நகர், ராமலிங்கநகர், கீதாநகர், கல்நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, வாலஜா தெரு, சண்முகா நகர், ரெங்கா நகர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாண்டமங்கலம், பாத்திமா நகர், நாச்சியார் கோவில் தெரு, முதலியார் சத்திரம், காஜாபேட்டை, அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம். நகர், வயலுார் மெயின்ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர், சோழங்கநல்லுார், புராமினேட் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, திருச்சி ஜங்சன், பறவைகள் சாலை மற்றும் பாரதியார் சாலை, பெரிய மிளகு பாறை, பொன்னகர், செல்வாநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சிவலிங்கம்(திருச்சி கிழக்கு), பிரகாசம்(தென்னூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.