திருச்சி அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் தற்கொலை!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன மண்டவாடி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (24 ). இவர் திருச்சி பெரிய மிளகுபாறையிலுள்ள கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் MBBS UG Student (House Sourgeon) பயின்று வருகிறார்.

தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள அறை எண் 25-ல் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து இவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த இவரது நண்பர் கோகுல் என்பவர் பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது மருத்துவ மாணவர் ரஞ்சித்குமார் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது.
உடனடியாக சகமாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவம் இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சக மாணவியிடம் விசாரித்த போது இவருக்கு அரியர்கள் இருப்பதாகவும் சக மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவராக பணிபுரிய உள்ளதால் மன உளைச்சல் இருந்ததாகவும் மூன்று வருடங்களுக்கு முன்பு காதல் தோல்வியும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.