பெட்ரோல் ஊற்றி தம்பதி தீக்குளித்த சம்பவத்தில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மனைவியும் சாவு

0 624
Stalin trichy visit

திருச்சி தென்னூர் பட்டாபிராமன்பிள்ளைரோடு ரெஜ்மெண்ட் பஜார் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(51). இவருடைய மனைவி மகாலெட்சுமி(49). இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. நடராஜனும், மகாலெட்சுமியும் தென்னூர் உழவர்சந்தை பகுதியில் பிஸ்கட் வியாபாரம் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் அவர்கள் இருவரும் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டனர். இதில் உடல் முழுவதும் தீ பரவி அலறி துடித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

இதில் படுகாயத்துடன் கிடந்த 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் நடராஜன் இறந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி மகாலெட்சுமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், வறுமையின் காரணமாகவும் மனவிரக்தியில் தீக்குளித்தது தெரியவந்தது. திருச்சியில் தீக்குளித்து கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.