விடுதலை செய்யக்கோரி தீப்பந்தங்களை கையில் ஏந்தி போராட்டம்

0 397
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, நைஜீரியா, தெற்கு சூடான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மாதம் 11-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் 36-வது நாளாக அவர்களுடைய காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து.

அப்போது தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி தீப்பந்தங்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் 37-வது நாளாக போராட்டம் நீடித்தது.

Leave A Reply

Your email address will not be published.