என்.ஐ.டி.யில் கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு
திருவெறும்பூர் துவாக்குடியில் அமைந்துள்ள என் ஐ டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் அமைய உள்ள முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார் என் ஐ டி வளாகத்தில் சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதுமுகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடன் என்.ஐ.டி இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் மற்றும் அரசு அதிகாரிகள் வளாகத்தில் அமைய உள்ள படுக்கைகள் குறித்தும் இதர வசதிகள் குறித்தும் விளக்கிக் கூறினர்.உடன் துவாக்குடி நகரமன்ற அலுவலர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி துவாக்குடி நகரச் செயலாளர் காயாம்பூ மற்றும் கழக நிர்வாகிகள் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்